தில்லானா

தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்!

Posted in அரசியல் by thillana on மார்ச் 30, 2011

இந்த தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்! அதுதான் தமிழகத்துக்கு நல்லதாக இருக்க முடியும். இதற்கு ஒன்றல்ல பத்து காரணங்களை கூற முடியும்.

10. திமுகவும் சரி, அதிமுகவும் சரி தமிழர்களை பிச்சைக் காரர்களாகத் தான் பார்க்கிறார்கள். இவர்கள் கொடுக்கிற இலவசங்களுக்காக ஓட்டுப போடுவது அவமானம். நான் உமி கொண்டு வருகிறேன். நீ அரிசி எடுத்து வா, இருவரும் ஊதி ஊதி பார்ப்போம். இருப்பது எனக்கு, பறப்பது உனக்கு என்று தான் பேரம் பேசுகிறார்கள். மக்கள் பணத்தை எடுத்து இரண்டாயிரம் கோடி செலவில் மிக்சி கிரைண்டர் கொடுத்து விட்டு, இரண்டு லட்சம் கோடி அடித்துக் கொண்டு போவதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

9. ஊழல் ராணியாக ஜெயலலிதா வலம் வந்ததை மறக்க முடியுமா, இப்போதும் சசிகலாவும் அம்மாவும் சேர்ந்து கொண்டு திமுகவை விட இரண்டு மடங்கு கொள்ளை அடிக்கவே பார்ப்பார்கள். இதற்கு திமுகவின் பிச்சை அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதே இவர்களுக்கு மக்கள் மீது எந்த மரியாதையும் இல்லை என்று காட்டுகிறது.

8. தேமுதிக தனியாக நின்றிருந்தால் நடுநிலையாளர்கள் அதற்கு ஓட்டு போடுவதைக் குறித்து சற்று யோசிக்கலாம். இப்போது அதுவும் திராவிடக் கட்சிகளுக்கு சொம்பு தூக்கியாக ஆனபின்பு வாக்காளர் முன் இருக்கும் சாய்ஸ் எளிதாகி விட்டது. தேமுதிகவையும் நிராகரிக்க வேண்டியது தான்.

7. ஜெயலலிதா மாறவில்லை, தனது ஆணவ சிம்மாசனத்தில் இருந்து இறங்கவில்லை என்பது வைகோவை அவர் நடத்திய விதத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

6.  இனியும் குடும்ப ஆட்சிக்கோ, மக்களை மதிக்காத ஆணவ ஆட்சியாளருக்கோ  ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பது நம்மை மட்டும் அல்ல, நமது குழந்தைகளையும் பாதிக்கும். ஏற்கனவே தமிழகத்தின் கடன் தொகை அதன் வருமானத்தை விட அதிகம். இப்போது இலவசங்களுக்காகவும் குடும்பக் கொள்ளைக் காகவும் மேலும் கடன் வாங்கினால், ஒரு நாள் நாடு திவாலாகி கடன் கொடுத்தவர்கள் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அப்போது தமிழர்கள் அகதிகளாக வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடும் நிலை வரும். கற்பனை கூட செய்ய முடியாத நிலை அது.

5. அணுஆயுத சக்தி பெற்றது, தங்க நாற்கர சாலை அமைத்தது என்று வெளிநாடுகள் மத்தியில் மரியாதையையும் உள்நாட்டில் மக்களுக்கு உள்ளபடியே நன்மை செய்ததும் பா.ஜ.க.

4. ஈழத் தமிழர்களுக்காக இன்றைய நிலையில் பேசக் கூடிய ஒரே கட்சி பா.ஜ.க தான்.

3. இன்று வரை பா.ஜ.க. வின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் இல்லை. இன்றும் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடிய பெரியவர்கள் அந்தக் கட்சியில் தான் இருக்கிறார்கள்.  ஒபாமாவைக் கண்டதும் “I love you sir” என்று முனகிய மன்மோகன் சிங் போல இல்லாமல், கண்ணியமும் நேர்மைத் துணிவும் உடையவர்கள் உள்ள கட்சியை ஆதரிப்பது புத்திசாலிகள் செய்யக் கூடியது. இதே காங்கிரசின் ஆட்சியில் அடுக்கடுக்காக எத்தனை ஊழல்கள்!

2. இன்று வரை திமுக.விலோ, அதிமுகவிலோ ஒரு தலித் தலைவராக ஆக முடியுமா… பா.ஜ.க.வில் ஆகி இருக்கிறார்கள்.

1.  பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் சில மிகவும் அவசியமானவை. உதாரணமாக இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள், தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கும் நாளாக கடைப்பிடிக்கப்படும் போன்றவை.

 

சுவாமிஜியிடம் சில கேள்விகள்

Posted in அரசியல் by thillana on ஜனவரி 4, 2011

ஒரு இந்து மத சுவாமிஜியிடம் சில கேள்விகள் (எவ்வளவு தூரம் இவர்கள் பொது அறிவுடன் இருக்கிறார்கள் என்று இந்த பதில்கள் வெளிச்சம் போடுகின்றன):

* கேள்வி: சுவாமிஜி, முஸ்லீம் தீவிரவாதிகள் வாரனாசியில்,   மும்பையில், டெல்லியில், பெங்களூரில், கேரளாவில் இப்படி பல இடங்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்துக்களை கொன்று குவித்து வருகிறார்களே, இது குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா…

* சுவாமிஜி: “ஓ… அப்படியா… முஸ்லிம்கள் இந்துக்களை பயமுறுத்துகிறார்களா.. ஏன் ஹிந்துக்கள் பயப்பட வேண்டும்? விளையாட்டுத்தனமாக இருக்கிறதே. உனக்கு தெரியுமா.. தியானம் உனக்கு வலிமை தரும் என்று?

* கேள்வி: ஜிகாதி தீவிரவாதிகள் காஷ்மீரை விட்டு இந்துக்களை உதைத்து அனுப்புகிறார்கள், இந்த இன ஒழிப்பை தடுக்க ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன்…

* சுவாமிஜி: நாமும் உண்மையில்லை. நமது உடலும் உண்மை இல்லை என்று உனக்கு தெரியுமா… வேதங்கள், உபநிடதங்களைப் படி. இவற்றை தேடிப் படிக்க இது நல்ல நேரம்.

* கேள்வி: காங்கிரஸ் கட்சியில் இத்தாலிய சோனியா ஊழல் செய்து நமது செல்வத்தைக் கொள்ளை அடிக்கிறாள். இதைப் பற்றி?

* சுவாமிஜி: மக்கள் பணம், பொருட் செல்வத்தைத் தேடி அலைகிறார்கள். நீ எங்கள் தியான வகுப்பில் சேர்ந்து அமைதியும் நிம்மதியும் அடையலாம்.

* கேள்வி: இந்நாட்களில் நமது வாழ்க்கை கடினமாகி விட்டது. ஜிகாதி தீவிரவாதம், மாவோயிச தீவிரவாதம், ஏமாற்றி மதமாற்றம், மக்கள் சுரண்டப் படுவது, மது அருந்தும் தீய பழக்கங்கள்,  போதை மருந்து புழக்கம்,  இவையெல்லாம் பெருகி வருகின்றன. எதிர்காலம் குறித்து நம்பிக்கை எங்கே வருகிறது? எங்கே போனது நமது பழைய பெருமைகள்? நமது நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்குமோ?

* சுவாமிஜி: எல்லா நாகரீகங்களும் மனிதர்களைப் போலவே, நேரம் முடிந்தால் இறந்து போகும். எல்லா பயங்கரங்களையும், வாழ்வில் அபாயங்களையும் புரிந்து கொண்டு  அவற்றைக் கடந்து சென்று, அவற்றுக்கு மேலே உயர்ந்த ஒன்றை நாம் தேட வேண்டும். பிரம்மத்தின் ஒரு பகுதி தான் நாம் என்று புரிந்து கொண்டு ஆன்ம பலத்தைப் பயன்படுத்தினால் நம்மால் முடியும். உன்னுடைய உளைச்சலுக்கும், எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் போராட உதவி தேவை. எங்கள் தியான வகுப்பில் சேர்.

* கேள்வி: மதச்சார்பற்ற இந்திய அரசு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2891.77 கோடி ரூபாய்கள் (Rs28, 920, 000,000) (US $672,558,140) முஸ்லிம் ஹஜ் பயணத்திற்காக மானியமாக வழங்குகிறது. இந்துக் கோவில்கள்  நாத்தீகர்கள், கம்யூனிஸ்டுகள், போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் இப்படிப் பட்டவர்கள்  தலைமையில் இயங்குகின்றன, இவர்களால் கோவில் சொத்து கொள்ளை அடிக்கப் படுகிறது. இந்த தீமை நிலைக்கு ஏதாவது மாற்று உண்டா…

* சுவாமிஜி: நீ உன் உண்மையான சுயத்தைத் தேடு. இறுதி உண்மையை தேடு. நாம் ஏன் இதைப் பற்றி எல்லாம் பேச வேண்டும்? உன்னுடைய ஆன்மீக முன்னேற்றத்தை உடனே துவக்கு, நிறைவான மன நிம்மதியைப் பெறுவாய்…

மேலும் படிக்க:

அருந்ததி சூசன்னா ராய் ஒரு ஊடகப் பச்சோந்தி

Posted in அரசியல் by thillana on திசெம்பர் 26, 2010
  • அருந்ததி சூசன்னா ராய் ஒரு  ஊடகப் பச்சோந்தி. ஊடக வெளிச்சத்துக்காக தன்  கொள்கையை மாற்றிக் கொண்டே இருப்பார்.  நர்மதை பாதுகாப்பு இயக்கத்தில் உழைத்ததெல்லாம் மேதா பட்கர். ஊடக வெளிச்சம் படும்போது அருந்ததி ஆஜர். இந்தியா அணுகுண்டு வெடித்த போது, உலக ஊடகங்களின் மொத்த கவனம் இந்தியா மீது திரும்பியது – சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அணுகுண்டு வெடித்ததை எதிர்த்து கருத்துச் சொல்லி பிரபலமானார்.  நக்சல் இயக்கம் பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது. இப்போது ஊடக கவனம் வரவும் அங்கேயும் அருந்ததி நுழைந்தார். காஷ்மீரில் பாதுகாப்பு படைகளின் மீது கல்லெறிந்து உழைத்ததெல்லாம் பிரிவினை வாதிகள். ஊடக கவனம் அங்கே போகிறது என்றதும் அங்கே போய் விட்டார் அருந்ததி. நாளை வேறொரு பிரச்னை ஊடகங்களால் கவனிக்கப் பட்டால் வெட்கமின்றி அங்கே ஆஜராகி விடுவார் தான்.
  •  “உலகில் மிகப்பெரிய பொய் பிரச்சாரம் என்பது, இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது தான். உண்மையில் இந்தியாவின் பல மாநிலங்கள் உள்நாட்டுப் போர் துவக்கும் நிலையில் உள்ளன”  என்று அமெரிக்காவில் முழங்கினார் அருந்ததி. அவர் திரும்ப இந்தியா வந்திறங்கியவுடன் அவர் கைது செய்யப் பட்டு திகார் ஜெயிலுக்கு அனுப்பப் படவில்லை என்று அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அமெரிக்கர்களுக்கு யார் போய் சொல்வது?
  •  அருந்ததியின் மிகப்பெரிய தவறு தேசம் என்கிற கருத்தாக்கத்தை அவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். அவரைப் பொருத்தவரை தேசியம் என்பதே பாசிசம். மனித சமூகத்தில் இரு பிரிவுகள் மட்டுமே இருக்கிறது – ஒடுக்குவோர், ஒடுக்கப் பட்டோர் என்பது மட்டுமே என்பதே அவரது புரிதலாக இருக்கிறது. இப்படி ஒரு கருப்பு-வெள்ளை முடிவை வைத்துக் கொண்டே எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறார். பிழை அங்கே தான் இருக்கிறது.
  • உளவாளிகள் என்று கூறி அப்பாவி மக்களை படுகொலை செய்யும்  மாவோயிச தீவிரவாதிகள், அப்பாவி காந்தியவாதிகள் என்றார். மும்பை தாக்குதல், இந்திய முஸ்லிம்களை ஒதுக்கி வைத்ததால் தான் என்றார். அரசாங்கம் காடுவாழ் மக்களின் நிலங்களைப் பறிக்கிறது என்றார் – உண்மையில் அருந்ததியே அப்படிப் பட்ட நிலத்தை ஆக்கிரமித்த செய்தி வெளிவந்து விட்டது. இதை எல்லாம் விட பெரிய காமெடி இருக்க முடியுமா!
  • அருந்ததி எது பேசினாலும், தேசத்தை துண்டாட நினைத்தாலும் அவரை ஆதரிக்கிற இடது சாரி ஊடகங்களின் இரைச்சலில் இவரை போன்ற இன்னொரு பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் தாக்கப் பட்டதும், ஜெயிலில் அடைக்கப் பட்டதும், நாடு கடத்தப் பட்டதும், சொந்த நாட்டுக்குள்ளேயே நுழைய முடியாததும் ஏன் கவனமும் ஆதரவும்  பெறவில்லை?
  • இந்தியா என்பதை இந்து மெஜாரிட்டி என்பது தான் அருந்ததியின் பார்வை. இந்தியாவின் பழமை, பெருமை, பன்முகத்தன்மை என்று எதுவும் அவர் கண்ணுக்கு தெரிவதே இல்லை. ஒரு பேச்சுக்கு காஷ்மீரை பிரித்து கொடுத்து விடுகிறோம் என்றே வைத்துக் கொண்டாலும், அதன் பிறகு அந்த மக்களுக்காக பாகிஸ்தானில் போய் தான் போராட வேண்டி இருக்கும். அதற்கு அருந்ததி துணிவாரா என்பது சந்தேகமே.
  • இந்து மெஜாரிட்டி முஸ்லிம் மைனாரிட்டியை ஒடுக்குகிறது என்று குரல் கொடுக்கிற அருந்ததி, அதே காசின் மறுபாகமான முஸ்லிம் மெஜாரிட்டி இந்து காஷ்மீரி பண்டிட் மைனாரிட்டியை அழித்தொழிப்பு செய்ததைப் பற்றி வாயே திறப்பதில்லை. உண்மையில் இந்தியா முழுமையும் இருக்கிற இந்து மெஜாரிட்டிகள் அனுபவிக்காத பல சலுகைகள் காஸ்மீரி முஸ்லிம் மெஜாரிட்டிகள் அனுபவித்து வருகிறார்கள்.
  • இலங்கை ராணுவத்தைக் கண்டித்து கட்டுரை எழுதிய அருந்ததி, அந்த கட்டுரையில் ஒரே ஒரு வார்த்தை கூட விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களையும்,  மக்களை கேடயங்களாக பயன்படுத்தியது பற்றியும் எழுதவே இல்லை. இப்படி செலக்டிவாக கண்டனம் செய்வது அருந்ததியின் வழக்கம்.
  • எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லாமல், திபெத், அக்சாய் சின் போன்ற பகுதிகளை ராணுவத்தை அனுப்பி சீனா தன்னுடையதாக்கிக் கொள்ளும் போது அதை கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்ளும் அருந்ததி, சட்ட பூர்வமாக இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தியாவுடன் இணைந்த காஷ்மீரை, இந்தியாவின் பகுதி அல்ல என்று கூறுவது வேடிக்கை தான்.
  • ராணுவத்தை காஷ்மீரை விட்டு வெளியேற்ற போராடும் அதே வேளையில், ராணுவம் அங்கே குவிக்கப் படும் காரணத்தையும் கொஞ்சம் பார்க்கலாம் அல்லவா. அந்த பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல், கல்லெறியும் பிரிவினை வாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவை குறைந்தாலே பெரும் பொருட் செலவில் ராணுவம் குவிக்கப்படுவது நிறுத்தப் படும். அதற்கு பாடுபடலாமே.
  • அருந்ததி ஏழையாக பிறந்தவரில்லை. ஏழைகளுடன் வாழ்ந்தவரும் இல்லை. ஒடுக்கப் பட்ட இனத்தை சேர்ந்தவரும் அல்ல. நன்கு படித்த, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். உலகம் முழுவதும் பயணம் செய்தவர். இருக்கட்டுமே ஒடுக்கப் பட்டவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா?  செய்யலாம் தான் ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். நர்மதா பாதுகாப்பு இயக்கத்தில் மேதா பட்கருடன் நெருங்கி தொடர்பு கொண்டவர் இப்போது அந்த பிரச்னையைப் பற்றி  பேசுவதே இல்லை. அந்த போராட்டத்தில் மூன்று மாதம் சிறை அல்லது 75 ரூ அபராதம் விதிக்கப் பட்டபோது, சிறைக்கம்பிகளுக்கு பின்னால் போட்டோ எடுக்க தேவையான நேரமே இருந்தார். பிறகு மரியாதையாக பணத்தைக் கட்டி வெளியே வந்து விட்டார். மக்களுக்காக குரல் கொடுத்தவர், அந்த மக்களுடனே சிறையில் இருப்பது தானே சரி… இந்திய சுதந்திரத்துக்காக போராடிய எந்த தியாகியாவது, காந்தி உட்பட அபராதம் கட்டி வெளியே வர சம்மதிப்பார்களா… மேல் தட்டு  அருந்ததிக்கு சிறை ஒரு போட்டோ வாய்ப்பு அவ்வளவே.
  • அருந்ததியின் புகழ் பெற்ற நாவலான God of Small things உண்மையில் ஹார்பர் லீ எழுதிய To kill a mocking bird நாவலில் இருந்து பல வகைகளில் உருவப்பட்டது என்று சொல்பவர்கள் உண்டு. ஏனோ அந்த ஒரு நாவலை எழுதிய பின் அருந்ததியின் கற்பனை வளம் வறண்டு போனது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
  • அருந்ததி ஆதரிக்கும் ஏழ்மையான, ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சியான மாவோயிஸ்டுகளின் கையில் இருப்பதோ, ஏகே 47, மேம்படுத்தப் பட்ட வெடிகுண்டுகள் (IED)… இதையெல்லாம் அவர்கள் பட்டினியில் தவித்துக் கொண்டே வாங்கினார்கள் என்று சொல்கிறார் அருந்ததி. அல்லது இப்படிப் பட்ட ஆயுதங்களுடன் போராடும் கூட்டம் தான் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நல்லது செய்யப் போகிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அரசாங்கங்கள் அல்ல என்று சொல்கிறார்.