தில்லானா

தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்!

Posted in அரசியல் by thillana on மார்ச் 30, 2011

இந்த தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்! அதுதான் தமிழகத்துக்கு நல்லதாக இருக்க முடியும். இதற்கு ஒன்றல்ல பத்து காரணங்களை கூற முடியும்.

10. திமுகவும் சரி, அதிமுகவும் சரி தமிழர்களை பிச்சைக் காரர்களாகத் தான் பார்க்கிறார்கள். இவர்கள் கொடுக்கிற இலவசங்களுக்காக ஓட்டுப போடுவது அவமானம். நான் உமி கொண்டு வருகிறேன். நீ அரிசி எடுத்து வா, இருவரும் ஊதி ஊதி பார்ப்போம். இருப்பது எனக்கு, பறப்பது உனக்கு என்று தான் பேரம் பேசுகிறார்கள். மக்கள் பணத்தை எடுத்து இரண்டாயிரம் கோடி செலவில் மிக்சி கிரைண்டர் கொடுத்து விட்டு, இரண்டு லட்சம் கோடி அடித்துக் கொண்டு போவதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

9. ஊழல் ராணியாக ஜெயலலிதா வலம் வந்ததை மறக்க முடியுமா, இப்போதும் சசிகலாவும் அம்மாவும் சேர்ந்து கொண்டு திமுகவை விட இரண்டு மடங்கு கொள்ளை அடிக்கவே பார்ப்பார்கள். இதற்கு திமுகவின் பிச்சை அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதே இவர்களுக்கு மக்கள் மீது எந்த மரியாதையும் இல்லை என்று காட்டுகிறது.

8. தேமுதிக தனியாக நின்றிருந்தால் நடுநிலையாளர்கள் அதற்கு ஓட்டு போடுவதைக் குறித்து சற்று யோசிக்கலாம். இப்போது அதுவும் திராவிடக் கட்சிகளுக்கு சொம்பு தூக்கியாக ஆனபின்பு வாக்காளர் முன் இருக்கும் சாய்ஸ் எளிதாகி விட்டது. தேமுதிகவையும் நிராகரிக்க வேண்டியது தான்.

7. ஜெயலலிதா மாறவில்லை, தனது ஆணவ சிம்மாசனத்தில் இருந்து இறங்கவில்லை என்பது வைகோவை அவர் நடத்திய விதத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

6.  இனியும் குடும்ப ஆட்சிக்கோ, மக்களை மதிக்காத ஆணவ ஆட்சியாளருக்கோ  ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பது நம்மை மட்டும் அல்ல, நமது குழந்தைகளையும் பாதிக்கும். ஏற்கனவே தமிழகத்தின் கடன் தொகை அதன் வருமானத்தை விட அதிகம். இப்போது இலவசங்களுக்காகவும் குடும்பக் கொள்ளைக் காகவும் மேலும் கடன் வாங்கினால், ஒரு நாள் நாடு திவாலாகி கடன் கொடுத்தவர்கள் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அப்போது தமிழர்கள் அகதிகளாக வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடும் நிலை வரும். கற்பனை கூட செய்ய முடியாத நிலை அது.

5. அணுஆயுத சக்தி பெற்றது, தங்க நாற்கர சாலை அமைத்தது என்று வெளிநாடுகள் மத்தியில் மரியாதையையும் உள்நாட்டில் மக்களுக்கு உள்ளபடியே நன்மை செய்ததும் பா.ஜ.க.

4. ஈழத் தமிழர்களுக்காக இன்றைய நிலையில் பேசக் கூடிய ஒரே கட்சி பா.ஜ.க தான்.

3. இன்று வரை பா.ஜ.க. வின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் இல்லை. இன்றும் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடிய பெரியவர்கள் அந்தக் கட்சியில் தான் இருக்கிறார்கள்.  ஒபாமாவைக் கண்டதும் “I love you sir” என்று முனகிய மன்மோகன் சிங் போல இல்லாமல், கண்ணியமும் நேர்மைத் துணிவும் உடையவர்கள் உள்ள கட்சியை ஆதரிப்பது புத்திசாலிகள் செய்யக் கூடியது. இதே காங்கிரசின் ஆட்சியில் அடுக்கடுக்காக எத்தனை ஊழல்கள்!

2. இன்று வரை திமுக.விலோ, அதிமுகவிலோ ஒரு தலித் தலைவராக ஆக முடியுமா… பா.ஜ.க.வில் ஆகி இருக்கிறார்கள்.

1.  பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் சில மிகவும் அவசியமானவை. உதாரணமாக இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள், தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கும் நாளாக கடைப்பிடிக்கப்படும் போன்றவை.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: